காவிரி நீர் திறக்கப்பட்டு பல நாட்களாகியும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் பாசனம் செய்ய இயலாமல் தவித்து வருவதாக திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கடைமடை பகுதிகளுக்கு காவிரி பாயும் என எதிர்பார்த்து இருந்தவர்கள் தான் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள்.
மேட்டூர் அணை கடந்த மாதம் 13 ஆம் தேதி திறக்கப்பட்டும் இதுவரை தங்கள் கிராமங்களில் காவிரி நீர் கால் நினைக்கவில்லை என கவலையுடன் தெரிவிக்கின்றார்கள் விவசாயிகள். இதனால் நீண்டகால பயிர்களை விதைத்து பாசனம் செய்யலாம் என்ற தங்களது எங்க முழு சிதைந்து போய் விட்டதாக கூறுகின்றனர்.
காவிரி நீர் கானல் நீராகி போனதால் நீண்ட காலப் பயிர்களுக்கு மாற்றாக குறுகிய காலப் பயிர்களை விதைக்க திட்டமிட்ட விவசாயிகளுக்கு இடியாக விழுந்தது விதைகளின் விலை. தனியார் விற்பனை நிலையங்களில் ஆயிரத்து 500 ரூபாய்க்கு மேல் இவைகள் விற்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
காவிரி நீர் கேள்விகுறியாக்கியுள்ள நிலையில் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் தங்களுக்கு குறுகியகால பயிர்களின் விதைகளை அரசு மானியத்துடன் வழங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.