வீட்டில் நுழைந்த 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டிற்குள் புகுந்த சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பின் தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். குடியாத்தம் பாலிடெக்னிக் கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரது வீட்டில் பாம்பு நுழைந்து விட்டதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது .விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு துறையினர் வீட்டிற்குள் பதுங்கியிருந்த சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பை ஒரு மணி நேரம் போராடி பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


Leave a Reply