வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருந்த பணம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருந்த இந்திய பணம் ரூபாய் 6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் அதுக்கு செல்லவிருந்த ஏர் ஏசியா விமான பயணிகளிடம் நேற்று இரவு விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு உதவியாளர் தலைமையில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மன்னார்குடியை சேர்ந்த அன்பு தாஸ் என்பவர் தனது ஆடைக்குள் ரூபாய் 6 லட்சத்து 74 ஆயிரம் மதிப்புள்ள 312 இந்திய ரூபாய் தாள்களை மறைத்து வைத்து கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply