தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானாவின் ஆளுநராக செப்டம்பர் 8-ம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். 5 மற்றும் 6 ஆம் தேதி தமிழிசை சௌந்தரராஜன் டெல்லியில் பயணம் மேற்கொள்கிறார். அதன் பின்னராக எட்டாம் தேதி அன்று மாலையோ அல்லது காலையோ ஆளுநர் மாளிகையில் பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
5 மற்றும் 6 ஆம் தேதி அவர்கள் டெல்லி பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். தமிழிசை சௌந்தரராஜன் ஒரு முன்மாதிரி ஆளுநராக இருந்து செயல்படுவேன் என்றும் அதற்காக தன்னை எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது என்பது தொடர்பான முக்கிய விஷயங்களையும் எடுத்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். தெலுங்கானா பற்றி முழுவதுமாக புரிதல் வேண்டும் அங்குள்ள அரசியல் கட்சிகளிடம் புரிதல் வேண்டும் அதற்கு அடுத்தபடியாக அங்குள்ள மக்களின் எண்ணங்கள் குறித்து புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.






