தமிழக பாஜகவின் அடுத்த தலைவரை நியமிக்க முக்கிய நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு

தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கான ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பாரதிய ஜனதாவின் புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு நெருங்கியுள்ளது. யார் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது 2014ஆம் ஆண்டு முதல் தமிழக பாரதிய ஜனதாவின் இருந்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கான ஆளுநராக நியமிக்கப்பட்டதால் தனது கட்சி பதவியையும் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

 

தமிழகத்திற்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணியில் பாரதிய ஜனதா மேலிடம் ஈடுபட்டுள்ளது. அதன்படி தற்போது பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளரும், கட்சியின் மாநிலச் செயலாளராகவும் உள்ள ராகவன் அடுத்த தலைவராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல பாரதிய ஜனதாவின் மாநில செயலாளராக உள்ள சீனிவாசன் என்பவரின் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

அதிமுகவிலிருந்து விலகி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதாவில் இணைந்த நைனார் நாகேந்திரன் பெயரும் இந்த போட்டிக்கான பட்டியலில் இருப்பதாக பேசப்படுகிறது. இவர் தற்போது தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் துணைத் தலைவராக உள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக நிர்வாகிகளிடம் பாரதிய ஜனதா பொதுச் செயலாளர் சந்தோஷ் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் கருத்து கேட்டுள்ளனர்.

 

அதன் அடிப்படையில் தமிழக பாரதிய ஜனதாவின் புதிய தலைவர் யார் என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் அக்கட்சியுடன் மேலிடம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply