சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கும் பணி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். படிப்படியாக லேண்டர் விக்ரமின் சுற்றுவட்டப்பாதையை குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இந்தியாவினுடைய முக்கிய திட்டமான சந்திராயன்-2 நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ அணிகள் சார்பில் அனுப்பப்பட்டது. முக்கிய நிகழ்வான லேண்டர் விக்ரம் பிரித்தெடுக்கும் நிகழ்வு கச்சிதமாக முடித்து இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இங்கு இந்தியாவில் இருக்கக்கூடிய விஞ்ஞானிகள் மட்டுமல்லாமல் உலகளாவிய விஞ்ஞானிகள் பெரிய அளவில் இதை எதிர்பார்க்கின்றன. ஏனென்றால் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்யக் கூடிய நாடுகள் மிகவும் குறைந்த நாடுகள் தான். அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளை அடுத்து இந்தியா ஒரு முக்கியமான நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது .
இன்று லேண்டர் பிரித்து எடுக்க கூடிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. மேலும் இரண்டு முறை பிரிந்து செல்லக் கூடிய நிகழ்வு இருக்கிறது. இது ஆம் ஆண்டிலிருந்து ரேடார் கருவி பிழியும் கருவி பிரித்த பின்னர் அதிலிருந்து ரோவர் கருவி பிரியும் அந்த கருவி நிலவின் தென்துருவத்தில் என்ன இருக்கிறது? அங்கு இருக்கக்கூடிய தட்பவெப்ப சூழ்நிலை பற்றியும் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா போன்றவற்றை ஆய்வு செய்வதற்கும் அந்த ரோபோ தான் உதவியாக இருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
முதலாவதாக இந்த ரேடார் கருவியில் இருந்து பிரிக்கப்பட்டு இருக்கக்கூடிய கருவியானது அடுத்த சில நாட்கள் தொடர்ந்து பயணிக்கறது. நிலவின் குறைந்தபட்சமாக 36 கிலோமீட்டர் தொலைவில் இருந்து அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் தொலைவு வரை நீள்வட்ட பாதையில் இருந்து விண்கலம் வந்துவிடும்.
தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் ஏழாம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் முழுவதுமாக தறை இறங்கும் நிகழ்ச்சியானது துவங்க இருக்கிறது. அதையடுத்து முக்கியமான ரோவர் கருவி வெளியே வரும் ஏறி இறங்கிய பின்பு தொடர்ந்து நகர்ந்து செல்லும்.






