விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் 3.50 லட்சம் மதிப்பில் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் இன்று காலை முதலே பல்வேறு வடிவத்தில் விநாயகர் சிலைகள் வைத்து கோலாகாலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்ட முழுவதும் இந்து முன்னணி சார்பாக 1001 சிலைகள் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இதில் கோவை ரத்தினபுரி பகுதியில் இந்து முன்னணி சார்பாக வைக்கப்பட்ட 9அடி விநாயகர் சிலை 3.50 லட்சம் மதிப்பில் 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளால் அலங்கிரிக்கப்பட்டது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகரை ஏராளமான பகத்தர்கள் தரிசனம் செய்தனர்.மேலும், 5 நாட்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட பின்னர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட பின் தெப்பக்குள மைதானத்தில் இந்து முன்னணி பொது கூட்டம் நடைபெற்ற பிறகு அங்குள்ள முத்தனம்குளத்தில் அனைத்து சிலைகளையும் கரைக்க உள்ளதாக இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் அவர்கள் தெரிவித்தார்.






