ஸ்டாலின் முதலில் பொருளாதாரக் கொள்கை என்றால் என்னவென்று விளக்கம் அளிக்கட்டும்-சரத்குமார் சரமாரி கேள்வி

மத்திய அரசை குற்றஞ்சாட்டி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் முதலில் பொருளாதார கொள்கை என்றால் என்ன என்பது பற்றி விளக்கம் அளிக்கட்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கேள்வி ?தவறான பொருளாதார கொள்கையை மத்திய அரசு கடைபிடிப்பதாக குற்றஞ்சாட்டி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் முதலில் பொருளாதார கொள்கை என்றால் என்ன என்பது பற்றி விளக்கம் அளிக்கட்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் நடைபெற்ற தனியார் கடை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, பேசிய அவர்,வாழ்க்கையில் பல வெற்றி, தோல்விகளை சந்தித்த தமிழிசைக்கு உயர் பதவி கொடுத்தது தமிழனாக மிகுந்த மகிழ்ச்சியடைவதாக கூறினார்.ரஜினியின் தேர்தல் அரசியலுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ரஜினி தனக்கு வேண்டுமானால் ஆதரவு கொடுக்கட்டும் என்று கூறினார்.

மேலும்,மத்திய அரசு தவறான பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடிப்பதாக விமர்சிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் பொருளாதாரக் கொள்கை என்றால் என்ன என்பது குறித்து முதலில் அவர் விளக்கம் அளிக்கட்டும் என்று கேள்வி எழுப்பினார்.மேலும், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள சமத்துவ மக்கள் கட்சி தயாராக இருப்பதாக கூறிய அவர் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

முன்னதாக பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பாரம்பரியமான குடும்பத்தில் வந்த தமிழ் பெண்ணுக்கு ஆளுநர் பதவி கொடுத்ததைக் விமர்சனம் செய்வது தவறு என்று கூறினார். தமிழிசைக்கு ஆளுநர் பதவிக்கான அனைத்து தகுதியும் இருக்கிறது என்று தெரிவித்தார்.


Leave a Reply