திருவாடானையில் திருமண விசேசங்களில் நூதன முறையில் கள்ள நோட்டு!

திருவாடானையில் திருமண விசேசங்களில் நூதன முறையில் கல்ல நோட்டு மாற்றும் திருடும் கும்பலை சேர்ந்த இரண்டு பெண்கள் ஒரு ஆண் உள்பட மூவரை பொது மக்கள் பிடித்து போலிசில் ஒப்படைத்தனர், திருவாடானை காவலதுறை விசாரித்து வருகிறார்கள்.

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் திருமணம் போன்ற விசேஷங்களில் நிமிடத்தில் கள்ள நோட்டு மாற்றுவது மற்றும் திருடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் கும்பலை சேந்தவர்களை பொதுமக்கள் பிடித்து போலிசிடம் கொடுத்தார்கள் திருவாடானை போலிசார் விசாரிக்கிறார்கள்.

 

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில் இன்று திருவாடானை இரட்டை அரு பங்களாவில் ஒரு திருமண விழா நடை பெற்றது. அதில் அந்த திருடர்கர் தங்களது கைவரிசையை காட்ட வந்த போது கூட்டம் குறைவாக இருந்ததால் மண்டபத்தில் இருந்து வெளியேவரும் பொழுது, இதே போல் இவர்கள் கடந்த மூகூர்த்த நாளன்று சின்னகீரமங்கலத்தில் உள்ள தனியார் மஹாலில் மொய் எழுதும் இடத்தில் 2000 ரூபாய் நோட்டை கொடுத்து மாற்றுவது போல் பாவனை செய்துவிட்டு நோட்டை கொடுக்காமல் சிறிது நேரம் கழித்து நான் கொடுத்த இரண்டு ரூபாய் நோட்டை கொடுங்கள் என்றும் அதற்கு இவரோடு துணையாக வரும் பெண்கள் ஆமாம் தற்போது தான் கொடுத்தார் என்றும் நூதனமாக பேசி திருடி வந்துள்ளனர்.

இந்நிலையில் விவரம் அறிந்து பொதுமக்கள் பிடிப்பதற்குள் அங்கிருந்து தப்பியோடினர். இவர்களை அடையாளம் தெரிந்து பொது மக்கள் பிடித்துள்ளார்கள். மேலும் கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றுவதும் இவர்களது தொடர் வேலையாக இருந்து வருவதாகவும் கடந்த மாதம் சின்னகீரமங்களத்தில் உள்ள தனியார் மஹாலில் ம 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் திருடிச் சென்றதாக கூறுகிறார்கள்.

 

இவர்கள் மதுரையை சேர்ந்தவர் என்பதும் ஒரு சுமோ காரில் வந்து இருப்பது தற்போது தெரிய வந்து மூவரையும் கைது செய்து சுமோ காரையும் கைப்பற்றி திருவாடானை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Leave a Reply