இராமநாதபுரத்தில் பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில், அச்சமற்ற வாழ்வே கண்ணியமான வாழ்வு- மக்கள் எழுச்சி பொதுக் கூட்டம்

இந்தியாவில் அரங்கேறும் படுகொலை, மத ரீதியான தாக்குதலை கண்டித்து பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா அச்சமற்ற வாழ்வே கண்ணியமான வாழ்வு – தேசிய அளவிலான பிரசார நிறைவு பொதுக் கூட்டம் இராமநாதபுரம் சந்தை திடலில் நேற்றிரவு நடந்தது. பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமை வகித்தார்.

 

மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது இபுராஹீம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் நியாஸ் கான், மாவட்ட தலைவர் எம்.ஐ.நூர் மாவட்ட தலைவர் முஸ்தாக் அஹமது, கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் முகமது நிஜாம், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாவட்ட தலைவர் முகமது ஹாலிது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா தேசிய பொது செயலாளர் முகமது அலி ஜின்னா, எஸ்டிபிஐ ., மாநில செயலாளர் அஹமது நவவி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் பஷீர் அலி நன்றி கூறினார். இக் கூட்டத்தில் பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


Leave a Reply