பாஜக மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன்!

ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து பாஜக தமிழக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன். கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை பாஜகவின் தமிழக தலைவராக திருமதி தமிழிசை சௌந்தரராஜன் பணியாற்றி வந்தார்.

 

இந்நிலையில் இன்றைய தினம் அவர் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக அறிவிக்கப்பட்டு இருந்தால் அதனை தொடர்ந்து தற்போது அவர் வகித்து வந்த தமிழக பாஜக தலைவர் பதவியை தற்போது தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்திருக்கிறார்.

 

வரும் டிசம்பர் மாதத்தோடு பாஜக தமிழக தலைவர் பதவி காலம் முடிவடைவதால், அடுத்ததாக யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் அந்த பொறுப்பில் இருந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானாவின் ஆளுநராக அறிவிக்கப்பட்டு இருந்தார். 2014 மார்ச் ஆகவே மாநில தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார் .

 

இன்றையதினம் அவருக்கான ஆளுநராக பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆளுநர் பதவியில் இருக்க கூடிய ஒருவர் அடுத்தபடியாக அவர்கள் கட்சி பணியை தொடர முடியாது .ஆகையால் அதற்கான ராஜினாமா கடிதத்தை வழங்கியிருக்கிறார் .அந்த ராஜினாமா கடிதம் ஆனது கட்சியின் தலைவருக்கு கொடுக்கப்பட இருக்கிறது . ஆளுநராக அவர் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்வதற்கு இந்த ராஜினாமா கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Leave a Reply