ஐபிஎஸ் அதிகாரியை வார்த்தைகளால் வறுத்தெடுத்த சட்டத்துறை அமைச்சர்

வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 28 தேதி அன்று லண்டன் புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இறங்கி 547 விமானத்தில் சென்ற முதல்வர் அங்கிருந்து லண்டன் சென்றார்.

 

முதல்வர் வெளிநாடு செல்லும் நிலையில், அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி விமான நிலையத்தில் அது தொடர்பான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது முதல்வரின் காரை பின் தொடர்ந்து அமைச்சர்கள் கார் ஒவ்வொன்றாக வந்துள்ளது. அங்கு ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த துணை ஆணையர் முத்துசாமி அமைச்சர்கள் காருக்குப் பின்னால் அதிமுக கொடி கட்டி வந்த காரை வழிமறித்து நிறுத்தி இருக்கிறார்.

 

இதை பார்த்து டென்ஷன் ஆன சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தனது காரில் இருந்து இறங்கி வந்து முத்துசாமியை நோக்கி யோ’ உனக்கு வேற வேலையே இல்லையா’ என்று சொல்லி சில வார்த்தைகளை அல்லி வீசியுள்ளார்.

 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த துணை ஆணையர் முத்துசாமி ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றார்.சுமார் நான்கு நிமிடங்கள் வரை இந்த சலசலப்பு நீண்டிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தோம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் முத்துசாமி. அவர்கள் பதவி உயர்வு பெற்ற சமயத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பணியில் இருந்து வேறு பணிக்கு மாற்றப்பட்டார்.

 

அந்த இடத்தில் மனோகரன் நியமிக்கப்பட்டார். ஆனால் முத்துசாமி தான் தனக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று ஜெயலலிதாவே அவரை மீண்டும் அழைத்துக் கொண்டார். அந்த அளவு அவரின் நம்பிக்கைக்கு உரியவராக முத்துசாமி இருந்துள்ளார்.

 

முன்பு ஜெயலலிதாவை சந்திக்க அமைச்சர் சி.வி.சண்முகம் சென்றிருந்த போது, அவருக்கு முத்துசாமி சில கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கிறது. அப்போது நடந்ததை மனதில் வைத்துக்கொண்டு, சி.வி. சண்முகம் துணை ஆணையர் என்றும் பாராமல், இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

அதிமுக தரப்பில் விசாரித்தால், வழக்கமாகவே அமைச்சர் சி.வி. சண்முகம் கோபப்படுவார் சில மாதங்களுக்கு முன்பு அண்ணன் மகன் விபத்தில் சிக்கி அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார். சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபப்படுகிறார். நேற்று நடந்த சம்பவமும் அப்படித்தான் என்கிறார்கள் கூலாக.

 

பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஒருவரை அனைவரின் முன்னிலையிலும் அமைச்சா் இவ்வாறு பேசியிருப்பது ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Leave a Reply