இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுக, திருவாடானையில் தமிழக அரசின் சீரிய திட்மான குடி மாரமத்து பணியின் கீழ் அனைத்து ஊரணி மற்றும் கண்மாய்களை தூர்வாரும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் மழை நீரை வீணாக்காமல் சேகரிக்கவும், குறைந்துவரும் நிலத்தடி நீரை அதிகரிக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் கீழ் திருவாடானை தாலுகா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஊரணி, குளம் மற்றும் கண்மாய்களை தூர்வாரி வருகின்றனர்.
இந்நிலையில் திருவாடானை சந்தப்பேட்டை ஊரணியை கடந்த 7 நாட்களாக தூர்வாரி கரைகளை பலப்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்பிடிப்பு பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறைக்கு, உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் திருவாடானை பகுதியில் அதற்கான பணிகள் கடுகளவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குடிமராமத்து பணி நடப்பதால் ஆக்கித்த பகுதிளைஅப்படியே விட்டுவிட்டு அதனை சுற்றி கரையை பலப்படுத்தி வருகின்றனர். இதனால் ஊரணியின் அளவு சுருங்கி மழைநீர் சேகரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த ஊரிணியின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஊரினியின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றாத பட்சத்தில், அதிகாரிகள் மீதும், உரிய நீதிமன்றத்தை நாடி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தார்கள்.






