டி‌என்‌பி‌எஸ்‌சி – குரூப் 4 தேர்வறைக்குள் செல் போனுடன் சிக்கிய இருவர்!

கடலூரில் குரூப்-4 தேர்வில் செல்போனுடன் உள்ளே செல்ல முற்பட்ட இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர். தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 8 பதவிகளுக்கு இந்த தேர்வு நடைபெற்று வருகிறது.

 

கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 72 ஆயிரத்து 62 பேர் தேர்வு எழுதுகிறார்கள். அதில் 242 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 17 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில், இந்த பகுதியில் பறக்கும் படைகள் மட்டுமில்லாமல் கடலூர் மாவட்ட ஆட்சியர் திடீரென மையங்களில் வந்து ஆய்வு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அவர் தனியார் கல்லூரியில் உள்ள ஒரு மையத்தில் திடீரென ஆய்வு செய்தார்.

 

ஆய்வு செய்யும்போது ஒரு அறையில் ஒரு நபர் தேர்வு மையத்தில் செல்போன் வைத்து தேர்வு எழுதுவது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை வெளியேற்றினார். மற்றொரு அறையில் மற்றொரு நபர் கேள்வித்தாள் கொடுத்த பிறகும் செல்போன் கையில் வைத்ததாக அறியப்படுகிறது. அவர்கள் இருவரையும் நேரடியாக பிடித்து இருவரையும் வெளியேற்றினார்.

 

அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவரின் ஒருவர் அவர்களில் ஒருவரின் பெயர் வெங்கடேஷ் மற்றொருவரின் பெயர் செந்தில்குமார் என தெரியவந்தது. வெங்கடேஷ் என்பவர் கும்பகோணத்தை சேர்ந்தவர்.தற்போது அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையருக்கு கடிதம் வாயிலாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

 

இவர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுக்கப்படும் அல்லது இவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியுமா அல்லது வேறு ஏதேனும் தண்டனை விதிக்கப்படுமா என இனி தான் தெரியவரும். மாவட்ட ஆட்சியர் செய்த சோதனையின் போது தான் அவர்கள் இருவரும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.


Leave a Reply