புதிய மோட்டார் வாகன சட்டத்தில் குழப்பம்!

புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் அச்சட்டம் அதில் குழப்பம் நிலவுகிறது. போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

இந்த சட்டம் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மத்திய அரசின் சட்டத் திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக மாற்றியமைக்கப்பட்ட அபராத தொகையை வசூலிப்பதில் குழப்பம் நிலவுகிறது. பழைய அபராத தொகையை காவலர்கள் வசூலித்து வருகின்றனர்.


Leave a Reply