பேராசிரியர்களின் வீடுகளுக்கு செல்ல நேரிட்டால் சிறப்பு அனுமதி அவசியம்

மாணவ மாணவியரை பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் தங்களுடைய வீடுகளை அழைக்கக்கூடாது என்று சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பாலியல் தொந்தரவு அற்ற வளாகமாக சென்னை பல்கலைக்கழகத்தை மாற்றும் முயற்சியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

மாணவ மாணவியர்களை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் தங்களுடைய வீடுகளுக்கு அழைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ள சென்னை பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் அழைத்தால் செல்லக் கூடாது என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை இருந்தால் தயக்கமின்றி பேராசிரியருடன் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கலாம் என்றும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மாணவ-மாணவிகள் பேராசிரியர்கள் வீடுகளுக்கு செல்லவோ அல்லது அவர்களுடன் வெளியே செல்ல நேரிட்டால் பல்கலைக்கழக அதிகாரிகள் உடன் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மேலும் மாணவர்கள் பேராசிரியர்கள் தரப்பில் தவறு ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Leave a Reply