மீன் சந்தையில் பாம்பை கொண்டு வந்து அட்டகாசம்!

புதுக்கோட்டையில் குடிபோதையில் இருந்த நபர் கையில் பாம்போடு மீன் சந்தைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சந்தைப்பேட்டையில் காய்கறிகளையும் மீன்களையும் வாங்க ஏராளமானோர் குவிந்திருந்தனர். .

 

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் குடிபோதையில் சுமார் ஏழு அடி நீளமுள்ள பாம்பை பிடித்துக்கொண்டு மீன் சந்தைக்கு வந்து, அதனை அங்கிருந்தவர்களிடம் காட்டி மிரட்டி அட்டகாசம் செய்தார். பாம்பை கண்டு பொதுமக்கள் சிலர் ஆத்திரம் அடைந்தார்கள். ஆனால் சிறுவர்கள் பாம்பை காண ஆர்வம் கொண்டு அந்த நபர் உடனே சுற்றி திரிந்தார்கள்.


Leave a Reply