அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீடு!

அசாம் மாநிலம் மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது.  இந்தப் பதிவேட்டில் 3 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து நான்கு பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. 19 லட்சத்து 6 ஆயிரத்து 687 பேரின் பெயர்கள் விடுக்கப்பட்டுள்ளதாக பதிவேட்டின் திட்ட மாநிலத்தில் ஒருங்கிணைப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

தேசிய குடிமக்களின் பதிவேட்டில் வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்டை நாடுகளிடம் இருந்து குடியேறிய தேர்வுகளை அடையாளம் காணும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது.

பலருடைய பெயர்கள் விடுபட்டு இருப்பதால் அசாம் மாநிலத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே 167 கம்பெனிகள் மத்திய ஆயுதப்படை காவலர்கள் இருக்கும் நிலையில் மேலும் கூடுதலாக 57 கம்பெனிகள் குறிக்கப்பட்டுள்ளன.


Leave a Reply