சென்னையில் 2600 விநாயகர் சிலை வைக்க அனுமதி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 2600 விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி கொடுத்திருக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

 

அதன்படி, இந்தாண்டு சென்னையில் மட்டும் 2600 சிலைகள் வைக்க காவல்துறை சார்பில் அனுமதி தரப்பட்டு இருக்கிறது. மாசு ஏற்படுத்தாத வகையில் சிலைகள் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பதட்டமான பகுதிகளில் கூடுதலான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் கலந்தாய்வு 2700 சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.


Leave a Reply