பொம்மைக்கு அளித்த சிகிச்சையால் தனக்கு சிகிச்சை அளிக்க ஒத்துழைத்த குழந்தை!

டெல்லியில் கால் முறிவு சிகிச்சைக்கு ஒத்துழைக்காத குழந்தையை சம்மதிக்க வைப்பதற்காக தாய் மேற்கொண்டு சாதுரிய நடவடிக்கை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. டெல்லி மருத்துவமனையில் கால் முறிவு சிகிச்சைக்காக 11 மாத பெண் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்தது.

 

முறிவு ஏற்பட்ட கால்களில் கட்டு போட்டு அசைக்காமல் செங்குத்தாக வைத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் ஏதும் அறியாத குழந்தை பலியானது சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தரவில்லை .இதனால் குழந்தைக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என மருத்துவர்கள் யோசித்து வந்த நிலையில் அந்த குழந்தைக்கு பிடித்தமான பொம்மை அருகில் படுக்க வைத்து அதன் காலில் முதலில் மருத்துவர்களை கட்டுப்போட வைத்துள்ளார் தாயார்.

 

இதை கண்ட குழந்தையும் தனது காலுக்கு சிகிச்சை எடுக்க ஒத்துழைப்பு தந்தது. பின்னர் பொம்மையின் கால்களை மருத்துவர்கள் செங்குத்தாக நிற்க வைப்பதும் குழந்தையும் அதே மாதிரி செய்து மெல்ல உறங்கி விட்டது. குழந்தையை கண்டிக்காமல் அதன் போக்கிலேயே சென்று சாதுரியமாக சிகிச்சைக்கு உதவிய அந்த தாயை மருத்துவமனையிலிருந்து அனைவரும் வெகுவாக பாராட்டினர்.


Leave a Reply