--- --:--:-- --

ஓ‌பி‌எஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் ட்ரோன் கேமராவால் சர்ச்சை!

download (6)

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து விட்ட போது மற்றும் கேமரா பறக்கவிட்டது குறித்து விளக்கம் கேட்டு தமிழக பொதுப்பணித் துறைக்கு கேரள அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

தேனி மாவட்டத்தில் உள்ள விளை நிலங்களில் சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கேரள பகுதியில் உள்ள அணையின் மதகு பகுதிக்குச் சென்றதை படம் பிடிப்பதற்காக டிரோன் கேமரா பறக்கவிடப்பட்டது.

கேரள அரசின் கட்டுப்பாட்டிலுள்ள புலிகள் சரணாலயத்தில் கேமரா பறந்த விவகாரம் கேரள ஊடகத்தில் விவாதத்திற்கு உள்ளானது. முன்னறிவிப்பு இல்லாமல் புலிகள் சரணாலயத்தில் கேமரா பறக்க விட்டது குறித்து புலிகள் சரணாலயம் தமிழக பொதுப்பணித் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon