புதுச்சேரியில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பிரதமரின் தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வில்லை என சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
இதனை அடுத்து இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரதமமந்திரியின் காப்பீடு திட்டத்தில் முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை தற்போது .புதுச்சேரியில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பத்தினருக்கு அமல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.