சென்னை புழல் அருகே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண்!

சென்னை புழல் அடுத்த செங்குன்றம் பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அபுபக்கர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஒரு சடலம் புதைக்கப்பட்ட தாக புகார் அளிக்கப்பட்டது.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த பகுதியில் இருந்த தகடுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்ட பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து குழியில் பெட்டிக்குள் வைத்து புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Leave a Reply