சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

காற்றின் வேகம் மாறுபாடு மற்றும் வெப்ப சலனம் காரணமாக மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் சேலம் மாவட்டம் ஓமலூர், திருவள்ளூர், பகுதிகளில் 4 சென்டி மீட்டர் மழையும், பள்ளிப்பட்டு சோழவரம் செம்பரம்பாக்கம் பூந்தமல்லி பகுதிகளில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


Leave a Reply