கோவையில் என்‌ஐ‌ஏ அதிகாரிகள் திடீர் சோதனை!

கோவையில் முக்கிய இடங்களில் அதிகாலை முதல் என்‌ஐ‌ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் தற்போது 5 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோவை கரும்புக்கடை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.

 

இந்த 5 இடங்களில் 20 பேர் என்‌ஐ‌ஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு குழுவில் 4 பேர் வீதம் என அறிந்து குழுக்கள் விட 20 பேரை சேர்ந்த என்னை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை 5 மணியில் இருந்தே இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

 

என்‌ஐ‌ஏ அதிகாரிகளின் சோதனையானது இந்த ஐந்து இடங்களில் நடைபெறும் சோதனை, போலீசாரும் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பயங்கரவாதிகள் ஊடுருவல் கோயம்புத்தூரில் இருப்பதாகவும் அதனால் பாதுகாப்பு பணியை படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சோதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பாதுகாப்பை மாநகர போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம் . ஆந்திரா மற்றும் கேரளாவில் என்‌ஐ‌ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகின. அதனை தொடர்ந்து இன்று தமிழகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது .


Leave a Reply