எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்வதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார். வெளிநாடுகளிலிருந்து புதிய தொழில் நுட்பங்களை அறிந்து தமிழ்நாட்டில் செயல்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முதல் அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார். இதேபோல, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சீனிவாசன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சரத் குமார் உள்ளிட்டோரும் முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து அவரது வெளிநாட்டு பயணம் சிறக்க வாழ்த்துக்கள் தொழில் முதலீடுகளை பெறவும் நவீன தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டு அவற்றை தமிழகத்தை செயல்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

காலை சென்னையிலிருந்து புறப்படும் முதலமைச்சர் லண்டனுக்கு செல்கிறார். அங்கு உள்ள மருத்துவத்துறையில் தமிழகத்தை செயல்படுத்தும் வகையில் பன்னாட்டு மனித வள மேம்பாட்டு துறையினரை கையொப்பமிடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதைத்தொடர்ந்து இது புதிய தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கு கொள்கிறார் செப்டம்பர் 1ஆம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்டு இரண்டாம் தேதி நியூயார்க் செல்லும் முதலமைச்சர் அங்கு அமெரிக்க தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் ஆகியோரிடம் கலந்துரையாடவுள்ளார்.
செப்டம்பரில் 7 ஆம் நாள் அமெரிக்காவில் இருந்து புறப்படும் முதலமைச்சர் 8 மற்றும் 9 ஆகிய நாள்களில் துபாய் தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பிறகு தொழில் முனைவோர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் வகையில் பெரிய கூட்டம் நடத்தி விட்டு செப்டம்பர் 10-ஆம் தேதி தமிழகத்திற்கு திரும்புகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




