நாமக்கல் மாவட்ட திமுக பிரமுகர் ஆனந்த் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமத்திவேலூர் பேட்டையில் மருத்துவமனை நடத்தி வந்த டாக்டர் ஆனந்த் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.
மருத்துவமனைக்குச் சென்று செவிலியர்களை அழைத்து மாத ஊதியத்தை வழங்கி விட்டு தனது காரில் வெளியே சென்றுள்ளார். பின்னர் செங்கப்பள்ளி.யில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்ற ஆனந்த் தனது உறவினர் ஒருவரை தொடர்புகொண்டு தோட்டத்திற்கு வருமாறு கூறியுள்ளார். அவரும் வரும் நேரம் பார்த்து ஆனந்தம் இடமும் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அருளரசு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனந்திற்கு மனைவியும், ஒரு மகளும் உள்ள நிலையில் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.