--- --:--:-- --

ஜெயலலிதா சொத்து வழக்கில் தீபா, தீபக் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

download (2)

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க உரிமை கோரிய வழக்கில் உறுதி செய்வதற்காக தீபக், தீபா ஆகியோர் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரி சென்னையை சேர்ந்த அதிமுக பிரமுகர் புகழேந்தி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதா இறந்த பிறகு போயஸ் தோட்ட இல்லம் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர் தற்போது அதை நினைவு இல்லமாக மாற்றுவதால் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்தார்.

அதேநேரத்தில் தீபா மற்றும் தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஜெயலலிதா இறுதி சடங்குகளுக்கு பிறகு தாங்கள் கட்சிக்காரர்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் தற்போது மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொன்னாலும் வேறு வழி இருப்பதாக குற்றம் சாட்டினார்.

 

இதனையடுத்து ஜெயலலிதா சொத்து தொடர்பாக வழக்கு தொடர்ந்தது உண்மைதானா என கண்டறிய தீபா மற்றும் தீபக் நேரில் ஆகஸ்டு 30-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon