டி‌டி‌எஸ் பாக்கி குறித்து முடிவெடுக்க நடிகர் விஷாலுக்கு உத்தரவு!

வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய 4 கோடி ரூபாய் டிடிஎஸ் பாக்கிய குறித்து முடிவெடுக்க விஷாலுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஷாலுக்கு சொந்தமான பிலிம் பேக்டரி நிறுவனம் தன்னுடைய ஊழியர்களிடம் பிடித்த டிடிஎஸ் தொகையை கடந்த ஐந்தாண்டுகளாக திருப்பி செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

வருமானவரித்துறை அவர்மீது எழும்பூரில் உள்ள பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் இரண்டு முறை சம்மன் அனுப்பி வைத்தால் அவர் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி மலர்மதி உத்தரவிட்டிருந்தார்.

 

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்த நடிகர் விஷால் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட வாரண்ட் திரும்பப் பெறக்கோரி விஷாலும் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்று நீதிபதி விஷால் சரணடைந்ததை பதிவு செய்ததுடன் வாரண்ட் உத்தரவை திரும்பப் பெற உத்தரவிட்டார்.

 

மேலும் 4 கோடி ரூபாய் அளவிற்கு வரி பாக்கி தொடர்பான வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை தொடர்ந்து நடத்துவதா? அல்லது வரி பாக்கியை செலுத்தி தீர்வு காண்பதா? என்பதை ஆடிட்டரிடம் ஆலோசித்து முடிவெடுக்க விஷாலுக்கு அறிவுறுத்திய நீதிபதி அந்த முடிவை செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.


Leave a Reply