முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண்ஜெட்லி அண்மையில் காலமானார்.அவரது அஸ்தி ஹரித்துவாரில் பாயும் கங்கை நதியில் கரைக்கப்பட்டது.
அவரது மகன் ரோஹன் அஸ்தியை கரைத்தார். அப்போது உத்தரகாண்ட் முதலமைச்ச.,ர் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து இருப்பதற் எதிர்க்கட்சிகள் மந்திரவாதி மூலம் தீயசக்திகளை ஏவிவிட்டது காரணம் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை ஏவி விடுவதாக தனக்கு ஒருவர் எச்சரிக்கை விடுத்ததாகவும் அதனையடுத்து இவ்வாறான செயல்கள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.