சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளைஞரொருவர் கஞ்சா போதையில் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த சீனிவாசன் கஞ்சா போதைக்கு அடிமையாகி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அரைநிர்வாண கோலத்தில் சீனிவாசன் வந்தார். காவல்துறையினர் தன்னை நம்மை நிம்மதியாக வாழ விடுவதில்லை என கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மார்பு மற்றும் கழுத்துப் பகுதிகளில் அறுத்து கொண்டார். இதை பார்த்த காவல்துறையினர் சீனிவாசனை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.