கருணாநிதியை வைகோ விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை விமர்சித்ததற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சிப்பதாக, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதினார்.

அதனை தொடர்ந்து அப்போதைய திமுக அரசு, வைகோவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில் இருந்து வைகோவை விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணை தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்எல்ஏக்கள் எம்பிக்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

 

வழக்கின் குற்றச்சாட்டு பதிவு, சாட்சிகள், விசாரணை, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை என அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்து விட்ட நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது.


Leave a Reply