திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மத்திய மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கைக்கு கண்டனம் உட்பட திமுக இளைஞர் அணி கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் லாபகரமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், வேலை வாய்ப்புகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது .

 

நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி வேலூர் உட்பட 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான அணியை வெற்றிபெற வைத்ததற்கான திமுக இளைஞர் அணியினர் மற்றும் தொண்டர்களுக்கு வாழ்த்து மற்றும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

அஞ்சல் துறை தேர்வு வழக்கத்திற்கு மாறாக ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் நடத்தப்பட்டதற்கு எதிராக குரல் எழுப்பி மாநில மொழிகளிலேயே தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய அரசை அறிவிக்க செய்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் திமுக இளைஞரணி தீர்மானத்தில் ஒன்றாகும்.

 

மாவட்டம் தோறும் பயிற்சி பட்டறைகளை நடத்துவதும், மாநில மாநாட்டை பெரிய அளவில் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தேசிய கல்வி கொள்கை வரையறையை திரும்பப் பெற வேண்டும் என்றும், திமுக இளைஞரணி தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.


Leave a Reply