சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் ஐந்தாம் கட்ட ஆய்வில் பலவகையான சுடுமண் சிற்பங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கீழடியில் 47 லட்சம் ரூபாய் செலவில் ஐந்தாம் கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் முருகேசன் என்பவரது நிலத்தில் அழகிய செங்கல் கட்டுமானம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து பல பொருட்கள் கிடைத்து வருகின்றன. தற்போது மனித முகம் கொண்ட சுடுமண் சிற்பங்கள் கண்டு. பிடிக்கப்பட்டுள்ளன.
இதுபோல் பெண்கள் காதில் அணியும் நட்சத்திர வடிவம் கொண்ட சுடுமண் காதணியும், சங்கு வளையல்களும் கிடைத்துள்ளன. ஆய்வு செய்த பின்னரே இந்தப் பொருட்களின் காலம் பற்றி துல்லியமாக தெரியவரும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






