காஞ்சிபுரத்தில் மேலும் ஒரு ராணுவ குண்டு! பதற்றமான சூழல்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே ராணுவத்திற்கு சொந்தமான குண்டு நேற்று வெடித்து 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு குண்டு கிடைத்துள்ளது. திருப்போரூர் அடுத்த மானாமதி பகுதியில் ஒரு குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மர்மப்பொருள் வெடித்ததில் 5 பேர் காயமடைந்தனர்.

 

இதில் 2 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் 2 பேர் உயிரிழந்தனர். இந்த இடத்தில் தடவியல் நிபுணர்கள் சோதனை செய்ததில் இன்று வடக்கு மண்டல துணை கண்காணிப்பாளர் தேன்மொழி ஆய்வு செய்தார். அங்கு வெடிக்காத நிலையில் மேலும் ஒரு குண்டு இருப்பதை கண்டனர். காஞ்சிபுரம். மாவட்டம் தடவியல் நிபுணர்கள் இதனை அப்புறப்படுத்த முடியாத நிலை உள்ளதால் சென்னையில் இருந்து வெடிகுண்டு அப்புறப்படுத்தும் குழுவினர் விரைந்துள்ளனர்.


Leave a Reply