தமிழகத்தில் கல்விக்கான தனி தொலைக்காட்சியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். உயிர் இருக்கும் வரை நம்மோடு வரும் ஒரே செல்வம் கல்வி செல்வம் மட்டுமே என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் கல்வி தொலைக்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் படிக்கும் போதே மாணவர்கள் தங்களது குறிக்கோளை நிர்ணயிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் .மேலும் மனைவியை தவிர வேறு சிறந்தது வேறு எதுவுமில்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.