சரித்திர குற்றவாளியாக உருவான வசந்தகுமார் அவர்களாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். முத்துக்குமாரின் மைத்துனர் கொண்ட செல்போன் ஆசையும் வசந்தகுமார் உயிருக்கு எமனாக முடிந்தது. போரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயதான வசந்தகுமார்., செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில் அவர் வீட்டில் இருந்த போது நண்பர்கள் சிலர் வந்து அழைத்துச் சென்ற நேரம் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
பெற்றோரும் உறவினர்களும் தேடிய நிலையில் அவர் கிடைக்காத நிலையில் மறுநாள் அருகிலிருந்து சுடுகாட்டில் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் கிடந்தது. அவரது தாய் பார்த்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மாங்காடு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வசந்தகுமார் நண்பர்கள் அஜித், ஆனந்த், கார்த்திக் ஆகிய நான்கு பேர் கைதாகினர் சக்திவேல் மற்றும் பரத் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. குமார் அவரது மைத்துனர் வினோத்குமார் அவரது நண்பர் ராகேஷ் உள்ளிட்டோருக்கு செல்போன் பறிப்பு தான் தொழில்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வசந்த் பறித்து வந்த செல்போன் மீது ஆசைப்பட்ட ராகேஷ் அதை எடுத்துக் கொண்டார். ராகேஷ் எடுத்த செல்போன் தான் தனக்கு வேண்டும் என்று கூறி வினோத்குமார் அதை கேட்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வரும் வினோத்குமார் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் 31ஆம் தேதி இரவு மது அருந்தலாம் என கூறி, ராகேஷ் இருவரும் போரூர் ஏரி கரைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மூவரும் மது அருந்திய நிலையில் ராகேஷ் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த வழக்கில் இருவரும் கைதாகி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர். வசந்தகுமார் மற்றும் வினோத் குமார் தீர்த்துக்கட்ட நண்பர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் பழைய நண்பர்களை பார்க்கலாம் எனக் கூறி அஜித் என்பவர் வசந்தகுமார் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றார்.அங்கு மறைந்திருந்த மணி மாறன் உள்ளிட்டோர் வசந்தகுமார் மீது பாய்ந்து அவரை கீழே தள்ளி கழுத்தை அறுத்து கொலை செய்தனர். கைதான இளைஞர்கள் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.