மத்திய அரசு அண்மையில் ஜம்மு காஷ்மீரில் 370வது சிறப்பு சட்டப்பிரிவை ரத்து செய்தது.இதற்கு அண்டை நாடான பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து தனது நாட்டின் தூதர் மற்றும் போக்குவரத்து சேவையினை நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்திற்குள் முக்கியமாக கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.அவர்கள்லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஊடுருவல் என்ற தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனையடுத்து கோவையில் மாநகர காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும்,ரோந்து பணியினையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும்,பயங்கரவாதிகள் ஊடுருவல் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து வழிபாட்டு தலங்களில் ” மெட்டல் டிடெக்டர் ” கருவி மூலம் தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் தடுப்புகளை அமைத்து காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தினை சேர்ந்தவர்கள் கோவையில் ஊடுருவல் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையினை அடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.