வங்கி ஏ‌டி‌எம் இல் 5 லட்சம் ரூபாய் வரை கொள்ளை!

விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூரில் ஏடிஎம்மில் பணம் எடுத்தவர்களை ஏமாற்றி ஐந்து லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்த இளைஞரை போலீசார் கைது செய்து உள்ளனர். செஞ்சி, மேல்மலையனூர், அவலூர்பேட்டை ஆகிய பகுதிகளில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் கிராம மக்களை ஏமாற்றி மர்ம நபர் ஒருவர் பணத்தை கொள்ளை அடிப்பதாக ஏராளமான புகார்கள் வந்தன.

 

இதுதொடர்பாக போலீசார் வங்கி ஏடிஎம்களில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதன்படி, அவலூர் பேட்டையில் உள்ள ஸ்டேட் பேங்க் வங்கி ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் திருவண்ணாமலை மாவட்டம் கிராமத்தை சேர்ந்த நவீன் ராஜ் என்ற இளைஞர் சிக்கினார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கு உதவுவது போன்று நடித்து, அவர்களது பணத்தை கொள்ளை அடித்ததாக நவீன்ராஜ் ஒப்புக்கொண்டார். இதுவரை ஐந்து லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாகவும் அவர் கூறினார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Leave a Reply