திருப்பூர் பல்லடத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உயர்மின் கோபுரம் அமைக்க நில அளவீடு செய்யப்படுவதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். விவசாய நிலங்களின் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நில அளவீடு செய்யும் பணி, கடந்த இரண்டு வார காலமாக மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

 

இதன் ஒரு பகுதியாக அடுத்த சாலையோர காளியப்பன் கவுண்டன் புதூர் உள்ளிட்ட கிராமங்களில் நில அளவீடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை அறிந்து அங்கு வந்த விவசாயிகள் அளவீட்டு பணிகளை நடத்தக்கூடாது எனக் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் தங்கள் விவசாய நிலங்களில் அளவீடு மேற்கொள்ளக்கூடாது என விவசாயிகள் உறுதியாக தெரிவித்தனர். விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

விவசாயிகள் மற்றும் பெண்களை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர் மத்திய அரசின் நிறுவனமும் தமிழக அரசின் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் இணைந்து தமிழகத்தின் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களான கோவை திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் 12 உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை விவசாயிகளின் விளை நிலங்களின் வழியாக செயல்படுத்த உள்ளனர் .இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் குறிப்பிடதக்கது.


Leave a Reply