“மூச்சு நின்றால் மட்டும் மரணமல்ல முயற்சி நின்றாலும் மரணம் ” திருப்பூர் பள்ளி விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்!

“மூச்சு நின்றால் மட்டும் மரணமல்ல முயற்சி நின்றாலும் மரணம் ” திருப்பூரில் நடைபெற்ற அரசுப்பள்ளி விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு… மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை”.
திருப்பூர் வீரபாண்டி பகுதியில் கடந்த 1984 ஆம் ஆண்டு அரசு நடு நிலைப்பள்ளியாக துவங்கப்பட்டு கடந்த 2010 – 11 ஆம் ஆண்டு மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

 

மேலும்.இப்பள்ளியில் 1310 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனிடையே இப்பள்ளிக்கு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 36.50 லட்சம் மதிப்பீட்டில் கலை அரங்கம் புதியதாக கட்டப்பட்டு இன்று மாலை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு ரிப்பென் வெட்டி புதிய கலை அரங்கத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

 

பின்னர் கல்வெட்டை துவக்கி வைத்து குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கிவைத்தார். பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டது இந்தியாவில் யாராலும் உருவாக்க முடியாத சாதனையை தமிழக அரசு உர்ய்வாக்கியிரதாகவும், சீருடை மாற்றங்கள் மாணவர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

 

மேலும் இந்தியாவிலேயே 45 லட்சத்து 15 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி தமிழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படுள்ளதாக தெரிவித்தார். 1200 பள்ளிகளுக்கு தலா ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வகம் இந்தாண்டு அமைக்கப்படும் என தெரிவித்தார். மூச்சு நின்றால் மட்டும் மரணமல்ல, முயற்சி நின்றாலும்.மரணம் தான் என மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அறிவுரை வழங்கினார்.

 

இந்நிகழ்சியில் கால்நடைத்துறை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருக்ஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Leave a Reply