கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை முயற்சித்து வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு காட்டு யானைகள் 20 நாட்களுக்கும் மேலாக சுற்றிவருகிறது.
அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட முதுமலையில் இருந்து பரணி, மாரியப்பன் என்ற இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்ததால் காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
அதன் காரணமாக வெளியிலிருக்கும் யானைகளை திறந்த வெளிக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில் யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்த வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் :
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை புறக்கணித்தது ஏன்? - திருமாவளவன் பதில்
நாங்கள் என்ன மனநோயாளியா? - விஜயை பாராட்டியதற்கு சீமான் ரியாக்ஷன்
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ்!
திமுக, அதிமுகவினர் இடையே நடந்த போட்டி..!
விஷமான குடிநீர்..நடுங்கிய சென்னை வாசிகள்..!
கிணற்றில் இருந்து பேயின் சத்தம் கேட்பதாக நினைத்த கிராமம்..!