தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கிரிஷ்ண ஜெயந்தி விழா!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மதுரை தெப்பக்குளம் அருகே தனியார் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணராகவும், ராதை வேடமிட்டு மேடைகளில் தோன்றினார்.

 

தொடர்ந்து அவர்கள் பகவத் கீதை மற்றும் கிருஷ்ணரைப் போற்றும் பாடல்களை பாடி அசத்தினர். இதனையடுத்து நடைபெற்ற குழந்தைகள் கலை நிகழ்ச்சிகளை பெற்றோர்கள் கண்டு மகிழ்ந்தனர். சேலம் தனியார் மழலையர் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மழலை மாறாத குழந்தை கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து வந்து பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.

 

விழாவில் கிருஷ்ணர் ராதை வேடமணிந்த அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பூக்கள், பழங்கள், கிருஷ்ணர் சிலைகள், உள்ளிட்ட பூஜை பொருட்களை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் நாளை காலை சிறப்பு பூஜைகள் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அருகே கொம்பூதி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கயிறு இழுக்கும் போட்டி மற்றும் உறியடி திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் கிருஷ்ண வேடமிட்டவர் வீதிகளில் மேளதாளம் முழங்க நடந்து வந்தனர். உறியடி திருவிழா நடத்தப்பட்டது.

 

இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதேபோன்று ஆர்எஸ் மடை கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் கிருஷ்ணர் வேடமணிந்து மாணவர்கள் இந்த ஆடல், பாடல், வில்லுப்பாட்டு உள்ளிட்டவைகளை நடைபெற்றது. இவ்விழாவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் குடும்பத்துடன் கண்டு களித்துள்ளார்.


Leave a Reply