புதுச்சேரியில் கண்ணை கட்டிக்கொண்டு புள்ளிகள் மூலம் ஓவியம் வரைந்து 5 வயது சிறுவன் சாய் பிரணவ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். வில்லியனூர் பகுதியை சேர்ந்த பிரபு என்பவரின் மகன் சாய் பிரணவ் புதுச்சேரி பகுதியில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வருகிறார்.
கண்களை மூடிக்கொண்டு புள்ளிகளை இணைத்து ஓவியங்களை வரைய கூடிய இவரது திறமையை சோதனையிட இன்று நிறுவனங்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். அதில் புள்ளிகளை இணைத்து 16 ஓவியங்களை 11 நிமிடம் 56 நொடிகளில் முடித்து சிறுவன் சாய் பிரணவ் சாதனை படைத்தார்.
சிறுவயதிலேயே சாதனைகளை படைத்து வரும் சிறுவனை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கைதட்டி பாராட்டினர்.