சேலத்தில் பெய்த கன மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. சேலத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை திடீரென பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் குளம். போல் தேங்கி உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் மழை காரணமாக சேலம் ராமகிருஷ்ணா ரோடு, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் குளம்போல் தேங்கியுள்ள மழை நீரால் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் ஊர்ந்து செல்லும் வாகனங்களால் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






