கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி தமிழகம் முழுவதும் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அரசு உத்தரவை மீறி இராசிபுரத்தில் பள்ளிகள் சில செயல்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் எஸ்ஆர்வி ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விகாஸ் மேல்நிலைப்பள்ளி அரசு உத்தரவை மீறி வழக்கம்போல் செயல்பட்டன. ராசிபுரத்தில் இதுபோல அரசு விடுமுறைகளில் பள்ளிகள் வழக்கம் போல செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவ்வாறு செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து பேசிய மாநில முதன்மை அலுவலர் உஷா அரசு உத்தரவை மீறி பள்ளிகள் செயல்படுவது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.