8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!
சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டம் தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது நீதிமன்றம். மத்திய அரசு விரிவாக பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. எட்டு வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசு தரப்பு முதற்கட்ட ஆய்விற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் எட்டு வழி சாலை திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்றும் வாதிட்டனர்.
மேலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும், மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எந்த அடிப்படையில் மத்திய அரசு மேற்கொண்ட விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டது, சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சுற்றுச்சூழல் அனுமதி பெறஎத்தனை காலம் பிடிக்கும் இது பார்க் மதத்திலுள்ள திட்டமா எந்த நிலையில் திட்டம் தடை பட்டுள்ளது என்று தொடர்பாக மத்திய அரசு விரிவாக பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




