இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது!

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் விருதை முதலமைச்சர் எடப்பாடி வழங்கியுள்ளார். சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக அரசு சார்பில் டாக்டர் அப்துல் கலாம் விருதை இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அறிவிக்கப்பட்டது.

அன்றைய தினம் அவர் வராத காரணத்தினால் அந்த விருது அவருக்கு வழங்கப்படாத நிலையில் இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து அவர் இந்த விருதை பெற்றுக்கொண்டார். ராக்கெட்டுகளை வடிவமைத்தல்., மேம்படுத்துதல் போன்ற சிறிய பங்காற்றியதற்காக விருது தரப்பட்டுள்ளது.

 

சந்திரயான்-2 விண்கலம் சந்திரனின் வட்டப்பாதையில் சுற்றி வருவதாகவும் வரும் செப்டம்பர் ஏழாம் தேதி நிலவில் அது தரையிறங்கும் என்றார். எதிர்காலத்தில் செவ்வாய் கிரகங்களுக்கு செயற்கைகோள் அனுப்பும் திட்டங்கள் உள்ளன என்றும்., இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.


Leave a Reply