புற்று நோய்க்கு அதிநவீன சிகிச்சை அளிக்கும் 24 கோடி ரூபாய் மதிப்பிலான லீனியர் ஹாசிலேட்டர் என்ற கருவிகள் சென்னை மற்றும் மதுரை மருத்துவமனைகளில் இன்னும் 15 நாட்களில் வரவழைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த நடந்த நிகழ்ச்சியில் காவிரி மருத்துவமனையில் அதிநவீன நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவை அமைச்சர் விஜயபாஸ்கர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நரம்பியல் அறுவை சிகிச்சையில் உதவக்கூடிய உலகில் அதிநவீன போர் 3d மற்றும் visualization ரோபோடிக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் நரம்பியல் அறுவை சிகிச்சைக்கு இதுபோன்ற கருவிகள் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது என்றார்.
இதே போன்று அரசு மருத்துவமனையிலும் கருவிகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பதாக கூறிய அவர் 24 கோடி ரூபாய் மதிப்பிலான லீனியர் ஹாசில் என்ற கருவியை வாங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் இந்த கருவிகளில் சென்னை மதுரை உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட உள்ளதாக கூறினார்.
சென்னை மற்றும் மதுரையில் இன்னும் 15 நாட்களில் இந்த கருவி. தொடங்கி வைக்கப்பட உள்ளது என்றார். ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் மேலைநாடுகளில் பிரபலமாக உள்ள நிலையில் இந்த தொழில்நுட்பங்கள் கொண்டு அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ரோபோட்டிக் தொழில்நுட்ப அறுவை சிகிச்சை முறை முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இடம்பெறவில்லை என்றும் அமைச்சர் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகிகளிடம் அரசு சார்பில் பேசப்படும் என்றார்.