பெண்களை கொலை செய்து சடலத்துடன் உடலுறவு கொண்டிருந்த கொடூரனை ஆந்திர மாநில போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அரக்கோணம் அடுத்த உள்ள ஊரைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண் கடந்த 9. ஆம் தேதி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து நிர்மலாவின் நெருங்கிய தோழி இந்திராணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆந்திர மாநிலம். நகரியில் சரோஜா என்ற பெண்ணின் தங்க நகைகளை விற்க முயன்ற அரக்கோணம் வெங்கடேச புரத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரை அம்மாநில போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன. போலீசில் சிக்கிய ஆனந்தன் நகரில் சரோஜா என்ற பெண்ணை அவரது கணவர் கேட்டுக்கொண்டதன் பேரில் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாகவும், பின்னர் அந்த சடலத்துடன் உடலுறவு கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது அரக்கோணத்தில் ஒரு பெண்ணை கொலை செய்து உடலுறவு வைத்துக் கொண்டதாக கூறி போலீசாரை அதிர வைத்துள்ளார். பாலியல் தொழில் போட்டியால் நிர்மலாவை அவரது தோழி இந்திராணி கொலை செய்ய கூறியதும் பிறகு போலீசில் சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் இந்திராணி தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தன் அரக்கோணம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவனை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.